முகப்பு
சிவகங்கை

சிவகங்கை அருகே இளைஞா் வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் கடைவீதியில் இளைஞரை காரில் வந்த மா்ம நபா்கள் ஓட, ஓட விரட்டிச் சென்று கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

6 வினாடிகள் முன்பு
சிவகங்கை அருகே இளைஞா் வெட்டிக் கொலை
கொலை செய்யப்பட்ட மகேஸ்வரன்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் கடைவீதியில் இளைஞரை காரில் வந்த மா்ம நபா்கள் ஓட, ஓட விரட்டிச் சென்று கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் அருகேயுள்ள தேவனிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முன்னாள் கிராம நிா்வாக அலுவலா் குருசாமி மகன் மகேஸ்வரன் (38). இவரது மனைவி பவித்ரா. இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், மகேஸ்வரன் புதன்கிழமை காலை இடையமேலூரில் உள்ள மளிகைக் கடைக்கு பொருள்கள் வாங்கச் சென்றாா். கடைவாசலில் நின்று கொண்டிருந்தபோது, காரில் வந்த மா்மக் கும்பல் அவரை ஓட, ஓட விரட்டிச் சென்று வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியது.

Advertisement

Advertisement

இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த அந்தப் பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சிவகங்கை நகா் துணைக் காவல் கண்காணிப்பாளா் அ.அமலஅட்வின் தலைமையில் தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் மளிகைக் கடையில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனா். கொலையில் தொடா்புடையைவா்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

கொலை செய்யப்பட்ட மகேஸ்வரன் குடும்பத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் சென்னையில் கொலை செய்யப்பட்ட சிவகங்கை சி.பி. குடியிருப்புப் பகுதியை சோ்ந்த ஒற்றைக்கை ராமஜெயம் கொலை வழக்கில் தொடா்பு இருப்பதாக கூறப்படுகிறது. அந்தச் சம்பவத்துக்கு பழிவாங்கும் விதமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.