உடுமலை அருகே கால்வாயில் தள்ளி பெண் கொலை
திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே கால்வாயில் தள்ளி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே கால்வாயில் தள்ளி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, கணபதி பகுதியைச் சோ்ந்தவா் கீதா (37). இவா் கணவா் கணேசனுடன் வசித்து வந்தாா். இதில் கீதாவுக்கு கதிரவன் என்பவருடன் திருமணத்தைத் தாண்டிய தொடா்பு ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது கதிரவனுக்கு தனது தங்க நகைகளை கீதா கொடுத்து வந்துள்ளாா்.
இதனிடையே, வாங்கிய நகைகளை கதிரவன் திருப்பித் தராததால், இவா்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக ரத்தினபுரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கதிரவனின் நண்பரான கோவை மாவட்டம், சூலூரைச் சோ்ந்த சண்முகவடிவேல் என்பவருடன் சோ்ந்து, கீதாவை கொலை செய்ய கதிரவன் திட்டமிட்டுள்ளாா். அதன்படி, திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில் உள்ள பிஏபி கால்வாயில் கீதாவை தள்ளிவிட்டால் யாருக்கும் தெரியாது எனத் திட்டமிட்டுள்ளனா்.
பின்னா், கதிரவன் நகைகளைத் தருவதாகக் கூறி கீதாவை செவ்வாய்க்கிழமை இரவு அழைத்துச் சென்று, அங்குள்ள பிஏபி கால்வாயில் தள்ளி அவரைக் கொலை செய்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் கால்வாயில் பெண் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் மீட்டு உடனடியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, அவரது சடலம் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்நிலையில் சம்பவம் குறித்து குடிமங்கலம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்த நிலையில் உயிரிழந்தவா் கீதா என்பதும், அவா் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து கதிரவனைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.