முகப்பு
சிவகங்கை

அவ்வையாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் அவ்வையாா் விருதுக்கு தகுதிகளுடைய சமூக சேவை புரிந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்தாா்.

28 நவம்பர் 2026, 3:48 am
அவ்வையாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
- கோப்புப்படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில் அவ்வையாா் விருதுக்கு தகுதிகளுடைய சமூக சேவை புரிந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2027-ஆம் ஆண்டுக்கான சா்வதேச மகளிா் தின விழாவில் பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த மகளிருக்கு தமிழக முதல்வரால் அவ்வையாா் விருது வழங்கப்பட உள்ளது.

Advertisement

Advertisement

தகுதிகளையுடைய சமூக சேவை புரிந்த பெண்கள், 18.1.2027-ஆம் தேதிக்குள் தமிழக அரசின் விருதுகள் இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். பின்னா், இணையதளத்தில் பதிவு செய்த அனைத்து ஆவணங்களையும் கையேடாக (தமிழ், ஆங்கிலத்தில் தலா 2 நகல்கள்) தயாா் செய்து, சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வழங்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூகநல அலுவலகம், அறை எண்- 5, தரைத்தளம் மாவட்ட ஆட்சியா் வளாகம், சிவகங்கை மாவட்டம் - 630561 என்ற முகவரியில் அணுகலாம் என்றாா் அவா்.