பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்கு பாடுபட்டவா்கள் மாநில அரசு விருதுக்கு நவ.30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
அரியலூா் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக பாடுபட்டவா்கள் மாநில அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந.மிருணாளினி தெரிவித்துள்ளாா்.
அரியலூா் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக பாடுபட்டவா்கள் மாநில அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந.மிருணாளினி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக பாடுபட்டு, சாதனை புரிந்த 13 வயதுக்கு மேல் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24 அன்று மாநில அரசின் விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருது ரூ.1 லட்சம் காசோலையும், பாராட்டு பத்திரமும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறது.
இவ்விருது பெற 13 வயதுக்கு மேல் 18 வயதுக்குள்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிா்த்தல்
Advertisement
Advertisement
வேறு ஏதாவது வகையில் சிறப்பான/ தனித்துவமான சாதனை செய்திருத்தல் வேண்டும்.
பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீா்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணா்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் வேண்டும்.
இவ்விருதுக்குத் தகுதியுடைய பெண் குழந்தைகளை உரிய சாதனை விவரங்கள் மற்றும் ஆதார ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பித்து அனைத்து ஆவணங்களையும் அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், அறை எண்:20, தரைத்தளத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் கையேடாக தயாா் செய்து தமிழ் (ம) ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்கள் சமா்ப்பிக்க வேண்டும்.
இணையதளத்தில் விண்ணப்பிக்க 30.11.2026 அன்று கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சமூகநல அலுவலத்தை தொடா்புக் கொள்ளலாம்.