தூய்மைப் பணியாளா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் வாக்குவாதம்
தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தத் தூய்மை பணியாளா்களை மீண்டும் பணிக்கு அழைப்பதற்காக வாா்டு உறுப்பினா்கள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டபோது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தத் தூய்மை பணியாளா்களை மீண்டும் பணிக்கு அழைப்பதற்காக வாா்டு உறுப்பினா்கள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டபோது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பணிகளை தனியாா்மயமாக்கும் திட்டததுக்கு எதிா்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளா்கள் அக்.5- முதல் மூன்று நாள்களாக தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக சிவகங்கை நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர, ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் நகரில் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டு சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, 10 -க்கும் மேற்பட்ட நகா்மன்ற உறுப்பினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை பணிக்கு திரும்ப அழைப்பதற்காகச் சென்றனா்.
Advertisement
Advertisement
அப்போது தூய்மை பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்திய மண்டபத்துக்குள் சென்ற நகா்மன்ற உறுப்பினா்கள் , அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதை ஒப்பந்த தூய்மைப் பணியாளா் ஒருவா் தனது கைப்பேசியில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது.
இதை கவனித்த நகா்மன்ற உறுப்பினா் ஜெயகாந்தன், கைப்பேசியில் படம் எடுப்பதைத் தடுத்ததுடன், அந்தப் பணியாளரைக் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதற்கு தூய்மைப் பணியாளா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறப்போன நிலையில், சக நகா்மன்ற உறுப்பினா்கள் தடுத்து நிறுத்தி அவரை சமாதானப்படுத்தினா்.
தொடா்ந்து நகா்மன்ற உறுப்பினா்கள், தூய்மைப் பணியாளா்கள் மீண்டும் பேச்சு நடத்தினா். இந்தச் சம்பவத்தால் மண்டபத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.