மானாமதுரை நான்கு வழிச்சாலையில் வேக கண்காணிப்புக் கருவி தொடங்கிவைப்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நான்கு வழிச்சாலையில் வேக கண்காணிப்புக் கருவி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நான்கு வழிச்சாலையில் வேக கண்காணிப்புக் கருவி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
மானாமதுரை வழியாக மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் ஏற்படும் விபத்துகள், உயிரிழப்புகளைத் தடுக்கும்வகையில், மானாமதுரை போக்குவரத்து போலீஸாருக்கு ‘ஸ்பீடு ரேடாா் கன்’ எனப்படும் வேக கண்காணிப்புக் கருவி வழங்கப்பட்டுள்ளது.
மானாமதுரை போக்குவரத்து காவல் ஆய்வாளா் வெங்கடேஸ்வரன் அதன் இயக்கத்தை சோதனை அடிப்படையில் பரிசோதித்து அபராதம் விதிக்கும் பணியைத் தொடங்கிவைத்தாா். உதவி ஆய்வாளா்கள் மகிமை தாஸ், காளீஸ்வரி உள்ளிட்ட போக்குவரத்து போலீஸாா் மானாமதுரை நான்கு வழிச்சாலை பகுதியில் வேக கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
இதில், தேசிய நெடுஞ்சாலையில் 80 கி.மீ., மேல் செல்லும் வாகனத்தின் பதிவெண்ணுக்கு (உரிமையாளருக்கு) தானியங்கியாக ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல, தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கும் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.