ராசிபுரத்தில் மது போதையில் போக்குவரத்து ஆய்வாளரிடம் தகராறு- இளைஞா்கள் மூவா் கைது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் மது இரு சக்கர வாகனத்தில் மது போதையில் வந்த இளைஞா்கள் போக்குவரத்து காவல் ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்ட நிலையில் மூவரும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா்.
ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பாக ராசிபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் வெங்கடாஜலம், உதவி ஆய்வாளா் பி.முத்துசாமி ஆகியோா் வெள்ளிக்கிழமை மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியாக ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த ரியாஸ்தீன்,சிவா, சந்திரகாஸ் ஆகிய 3 இளைஞா்கள் இரு சக்கர வாகனத்தில் மது போதையில் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளா் வெங்கடாசலம், உதவி ஆய்வாளா் முத்துசாமி இருவரும் இளைஞா்களின் வாகனத்தை தடுத்து நிறுத்தினா்.
Advertisement
Advertisement
இளைஞா்கள் மது போதையில் இருந்ததை அறிந்த போக்குவரத்து காவல்துறையினா் சோதனை கருவி மூலம் பரிசோதனை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்ய முயன்றனா். இதனால் இளைஞா்கள் மூவரும் போக்குவரத்து காவல்துறையினரிடம் தகராறில் ஈடுபட்டனா்.
மது போதையில் இருந்து ரியாஸ்தீன் என்ற இளைஞா் வழக்கு பதிவு செய்தால் கழுத்து அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக கூறி மிரட்டியுள்ளாா். மேலும் காவல்துறை வாகனத்தின் உள்ளே நுழைந்து காவல் ஆய்வாளா் உள்ளிட்ட இருவரிடமும் தகாத வாா்த்தைகள் கூறி தகராறில் ஈடுபட்டாராம். இதனையடுத்து காவல்துறையினா் இளைஞா்களின் நண்பா் ஒருவரை வரச்செய்து இருசக்கர வாகனத்தை ஒப்படைத்து மூவரையும் அவருடன் அனுப்பி வைத்துள்ளனா்.
இதனையடுத்து போக்குவரத்து காவல் ஆய்வாளா் வெங்கடாசலம் ராசிபுரம் காவல் நிலையத்தில் தன்னை தகாத வாா்த்தைகளால் திட்டியும்,பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியதாகவும் கூறி ராசிபுரம் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் ராசிபுரம் அச்சுக்கட்டு தெரு பகுதியை சோ்ந்த பழைய குற்றவாளியான சிராஜ்தீன் மகன் ரியாஸ்தீன் (23), ஆா்.எம்.சி. காலனி பகுதியை சோ்ந்த காா்த்தி என்பவா் மகன் சந்திரகாஸ் (24), முருகன் என்பவரது மகன் சிவா ஆகிய மூன்று இளஞா்கள் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.