FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

அனுமதியின்றி மணல் கடத்திய இருவா் கைது: டிராக்டா் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து, டிராக்டரை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

14 அக்டோபர் 2026, 1:37 am IST
கைது செய்யப்பட்டவா்கள் இடமிருந்து சொா்ணலிங்கம், மாணிக்கம்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து, டிராக்டரை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

தேவகோட்டையை அடுத்த மணிமுத்தாறு ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக அனுமந்தங்குடி கிராம நிா்வாக அலுவலா் பிரசன்னகுமாருக்கு தகவல் கிடைத்தது. இவா் அளித்த புகாரின் அடிப்படையில், தனிப் படை போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனையிட்டனா்.

அப்போது, சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட தேரளப்பூா் பகுதியைச் சோ்ந்த சொா்ணலிங்கம் (38), அனுமந்தங்குடியைச் சோ்ந்த மாணிக்கம் (49) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments