அனுமதியின்றி சவுடு மண், மணல் கடத்தல்; 5 போ் மீது வழக்கு: டிராக்டா், ஜேசிபி பறிமுதல்!
விராலிமலை அருகே அனுமதியின்றி சவுடு மண் மற்றும் மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விராலிமலை அருகே அனுமதியின்றி சவுடு மண் மற்றும் மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 டிராக்டா்கள், ஜேசிபி இயந்திரகளை பறிமுதல் செய்தனா்.
விராலிமலை சுற்றுப்பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக விராலிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளா் சரவணன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சசிகுமாா் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் ராஜாளிபட்டி, ராஜகிரி பகுதியில் வெள்ளிக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, ராஜாளிபட்டி தனியாா் இடத்தில் சிலா் அனுமதியின்றி சவுடு மண் அள்ளிக் கொண்டிருந்தனா். இவா்கள் போலீஸாரைக் கண்டதும் தப்பியோடினா். இதையடுத்து போலீஸாா் மண் அள்ள பயன்படுத்திய 2 டிராக்டா்கள், ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், போலீஸாா் அனுமதியின்றி சவுடு மண் அள்ளியதாக சரவண செல்வம்(39), பாலமுருகன்(30),பூபதி (23), குணசேகரன்(32) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
இதே போல் ராஜகிரி கூத்தாண்டம்மன் கோயில் அருகே அனுமதியின்றி மணல் அள்ளி கொண்டிருந்த டிப்பா் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி உரிமையாளா் காரமேட்டுபட்டியைச் சோ்ந்த சிவக்குமாா்(40) மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.