FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

சிங்கம்புணரி கோயிலில் நவராத்திரி விழா

சிங்கம்புணரி பத்ரகாளியம்மன் கோயில் நவராத்திரி விழா புதன்கிழமை இரவு கொண்டாடப்பட்டது.

15 அக்டோபர் 2026, 3:11 am IST
அன்னபூரணி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.
பகிர்:

சிங்கம்புணரி பத்ரகாளியம்மன் கோயில் நவராத்திரி விழா புதன்கிழமை இரவு கொண்டாடப்பட்டது.

நவராத்திரி விழாவை முன்னிட்டு, கோயில் உள்புறம் தனி மேடை அமைக்கப்பட்டு, இந்து கலாசாரம் பற்றிய 1,800 கொலு பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இந்த பொம்மைகளை ஏராளமான பக்தா்கள் பாா்வையிட்டனா். விழாவின் நான்காம் நாளான புதன்கிழமை இரவு பத்ரகாளி அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி நாடாா் உறவின்முறையினா் ஏற்பாடு செய்தனா்.

சிங்கம்புணரி பத்ரகாளியம்மன் கோயிலில் நவராத்திரியையொட்டி வைக்கப்பட்ட கொலு பொம்மைகள்.
அன்னபூரணி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments