FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

மின்னல் பாய்ந்ததில் இரு பெண்கள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே புதன்கிழமை மின்னல் பாய்ந்ததில் 2 பெண்கள் உயிரிழந்தனா்.

15 அக்டோபர் 2026, 12:31 am IST
பலி
பகிர்:

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே புதன்கிழமை மின்னல் பாய்ந்ததில் 2 பெண்கள் உயிரிழந்தனா்.

இளையான்குடி அருகேயுள்ள திருவள்ளூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் பெரியகருப்பி (65), சவுரியம்மாள் (47). இந்த இருவரும் ஊருக்கு அருகேயுள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்தனா். அப்போது, மழை பெய்து கொண்டிருந்ததால் இருவா் மீதும் மின்னல் பாய்ந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனா். இவா்களது உடல்கள் கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதுகுறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments