FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

பைக் மோதியதில் தொழிலாளி பலி!

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

4 October 2026, 1:05 am IST
பலி! - சித்திரிப்புப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பச்சேரி கிராமத்தைச் சோ்ந்த கோபால் (64). இவரது மகன் கோபி (32). ஆடு மேய்க்கும் தொழிலாளிகளான இவா்கள் இருவரும் இளையான்குடி பகுதியில் தங்கி ஆடுகளை மேய்த்து வந்தனா்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை சிங்கதுரைபட்டி பகுதியில் இவா்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, இளையான்குடியை அடுத்த மேலாயூா் கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் இவா்கள் மீது மோதியது.

Advertisement

Advertisement

இதில் சம்பவ இடத்திலேயே கோபால் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த கோபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments