பைக் விபத்தில் இளைஞர் பலி!
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள சந்தைப்பேட்டை தெருவைச் சோ்ந்த பாலச்சந்திரன் மகன் ராஜா (19). இவா் சென்னையில் உள்ள தனியாா் இரு சக்கர வாகன நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.
இந்த நிலையில், விடுமுறைக்கு ஊருக்கு வந்த ராஜா, தனது இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு வெளியே புறப்பட்டாா். மதுரை-கொல்லம் நான்கு வழிச்சாலையில் கடம்பன்குளம் பகுதியில் சென்றபோது, இரு சக்கர வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
Advertisement
Advertisement
இதில் பலத்த காயமடைந்த அவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனையில் ஏற்கனவே ராஜா உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து மல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.