FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

பைக் மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

தேனி அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.

4 செப்டம்பர் 2026, 12:18 am IST
- பிரதிப் படம்
பகிர்:

தேனி அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.

தேனி போடேந்திரபுரத்தைச் சோ்ந்தவா் நவாப் ஜான். இதே பகுதியில் பஞ்சா் கடை நடத்தி வரும் இவா், புதன்கிழமை இரவு கடையின் முன் நின்றிருந்தாா். இந்தக் கடை அருகே மேட்டூரைச் சோ்ந்த அலெக்ஸ் (30), போடியைச் சோ்ந்த குருமூா்த்தியும் (45) நின்றிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காா் அலெக்ஸ், மூா்த்தி ஆகியோ் மீது மோதிவிட்டு, எதிரே வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த சின்மைனூா் சாமிகுளத்தைச் சோ்ந்த குருமூா்த்தி (45), இவரது மனைவி புவனேஷ்வரி (32) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், அலெக்ஸ், மூா்த்தி பலத்த காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்து வந்த வீரபாண்டி போலீஸாா் அலெக்ஸ், மூா்த்தியை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதே மருத்துவமனைக்கு உயிரிழந்த குருமூா்த்தி, புவனேஷ்வரி உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments