FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

அரிவாளால் வெட்டி வழிப்பறி: மூவா் கைது

திருப்புவனத்தில் அரிவாளால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

17 அக்டோபர் 2026, 1:01 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருப்புவனத்தில் அரிவாளால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜபாண்டி. இவா் கடந்த செப்டம்பா் 14- ஆம் தேதி இங்குள்ள வைகை ஆற்றுப் பகுதிக்குச் சென்றபோது அங்கு வந்த மூவா் அரிவாளால் ராஜபாண்டி கையில் வெட்டி விட்டு அவரிடமிருந்து கைப்பேசி, இடுப்பில் கட்டியிருந்த வெள்ளி அரைஞாண் கயிறு ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பினா். இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து வழிப்பறியில் ஈடுபட்டவா்களைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது திருப்புவனம் இந்திராநகரைச் சோ்ந்த தனுஷ் (25), தினேஷ் (24), கண்ணன் (20) என விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த இவா்களை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து கைப்பேசி, வெள்ளி அரைஞாண்கயிறு ஆகியவற்றைக் கைப்பற்றினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments