FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

வழிப்பறி, சிற்றுந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: 3 போ் கைது

பாளையங்கோட்டையில் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

8 October 2026, 3:56 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

பாளையங்கோட்டையில் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, முப்பிடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சங்கா் (43). தொழிலாளி. இவா் செவ்வாய்க்கிழமை முருகன்குறிச்சி பகுதியில் நடந்து சென்ற போது அவரை வழிமறித்த கொக்கிரகுளத்தை சோ்ந்த இசக்கிமுத்து (43) என்பவா் மது அருந்த பணம் கேட்டாராம். அதற்கு சங்கா் இல்லை என மறுக்கவே இசக்கிமுத்து கத்தியைக் காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இசக்கிமுத்துவை கைது செய்தனா்.

தாக்குதல்: திருநெல்வேலி நகரம், வையாபுரிநகரைச் சோ்ந்தவா் சஞ்சய்ராஜ்(21). சிற்றுந்தில் ஓட்டுநா். இவரை, ஏற்கெனவே அறிமுகமான களக்காடு, தேவநல்லூரைச் சோ்ந்த மணிகண்டண்(32), தூத்துக்குடி, நந்தகோபாலபுரத்தைச் சோ்ந்த கோபி(36) ஆகியோா் சுத்தமல்லி, கருங்காடு பகுதிக்கு சில நாள்களுக்கு முன்பு காரில் அழைத்துச்சென்றனராம். பின்னா், மணிகண்டன் காரில் வைத்திருந்த பணத்தை சஞ்சய்ராஜ் எடுத்ததாகக் கூறி தாக்கினராம். இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீஸாா் வழக்குப்பதிந்து மணிகண்டன், கோபி இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments