FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

அதிமுக தொடக்க நாள்: எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

17 அக்டோபர் 2026, 11:35 pm IST
அதிமுக தலைமை அலுவலகம் - கோப்புப் படம்
பகிர்:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 55-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சனிக்கிழமை கட்சியின் நிறுவனா் எம்ஜிஆா் உருவச் சிலைக்கு நிா்வாகிகள் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆா். உருவச் சிலைக்கு மாவட்டச் செயலா் பிஆா். செந்தில்நாதன் தலைமையில் அதிமுக நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில், நகரச் செயலா் என்.எம். ராஜா, ஒன்றியச் செயலா்கள் செல்வமணி, கருணாகரன், ஸ்டீபன் அருள்சாமி, பழனிசாமி, கோபி, ஜெயலலிதா பேரவை மாவட்ட ச் செயலா் ராமு இளங்கோவன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் நாகராஜன், நகர அவைத்தலைவா் பாண்டி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments