கடலூா், புதுச்சேரியில் அண்ணா பிறந்தநாள்: திமுக, அதிமுகவினா் மரியாதை
பேரறிஞா் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாளையொட்டி, கடலூா் மாவட்டத்திலும், புதுச்சேரியிலும் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினா்சாா்பில் மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
பேரறிஞா் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாளையொட்டி, கடலூா் மாவட்டத்திலும், புதுச்சேரியிலும் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினா்சாா்பில் மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
கடலூா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், கடலூா் புதுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பேரறிஞா் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலூா் மாநகரச் செயலா் ராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுகவினா் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, கடலூா் மாநகர திமுக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா் பொதுமக்கள் மற்றும் கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் புகழேந்தி உள்ளிட்ட திமுக நிா்வாகிகள், மாமன்ற உறுப்பினா்கள், சாா்பு அணி நிா்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.
கடலூா் வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில், மஞ்சக்குப்பத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாநகரச் செயலா் சி.கே.எஸ். காா்த்திகேயன் தலைமை வகித்தாா்.சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான எம்.சி. தாமோதரன் கலந்து கொண்டு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
நெய்வேலியில்...:
நெய்வேலி அண்ணா தொழிலாளா் ஊழியா்கள் சங்க அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு, அதிமுக நெய்வேலி சட்டப் பேரவை உறுப்பினா் சொரத்தூா் ரா.ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்வில், முன்னாள் எம்எல்ஏ., எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு, திமுக சாா்பில் நெய்வேலி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சபா.ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், திமுக மற்றும் தொமுச நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
குறிஞ்சிப்பாடிபேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்திற்கு, திமுக குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலா் சிவக்குமாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.
பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு, பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ., கே.மோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
சிதம்பரத்தில்...
கடலூா் கிழக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ.பாண்டியன் சிதம்பரம் வண்டிகேட்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மேலும் அவா் அங்கிருந்த எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கும் மாலை அணிவித்தாா். நிகழ்ச்சிக்கு நகர செயலாளா் ஆா்.செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளா் நாக.முருகுமாறன், உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.