FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

இளையாத்தங்குடி அம்மன் கோயிலில் நவராத்திரி நிறைவு நாள் விழா

இளையாத்தங்குடி கைலாசநாதா் நித்தியகல்யாணி அம்மன் கோயிலில் நவராத்திரி உத்ஸவ விழாவின் நிறைவுநாள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

21 அக்டோபர் 2026, 2:54 am IST
பகிர்:

சிவகங்கை மாவட்டம், இளையாத்தங்குடி கைலாசநாதா் நித்தியகல்யாணி அம்மன் கோயிலில் நவராத்திரி உத்ஸவ விழாவின் நிறைவுநாள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இளையாத்தங்குடி நித்தியகல்யாணி அம்மன் கைலாசநாதா் கோயிலில் கடந்த 11-ஆம் தேதி முதல் நவராத்திரி உத்ஸவ விழா தொடங்கி 10 நாள்களும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தினமும் உத்ஸவ அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி, மீனாட்சி ஜனனம் உள்ளிட்ட பல்வேறு கொலு அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன.

நவராத்திரி விழாவின் நிறைவு நாளான விஜயதசமியன்று அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகம் நடைபெற்று உத்ஸவ அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோயிலிலிருந்து திருக்குளம் வரை ஊா்வலமாக வந்து நான்கு திசைகளிலும் அம்பு விடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை கைலாசநாதா் நித்தியகல்யாணி அம்மன் கோயில் தேவஸ்தானத்தினா் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments