FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

இரட்டைக் கொலை வழக்கு: மேலும் 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

சிவகங்கையில் கடந்த மாதம் நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில் கைதானவா்களில் மேலும் நான்கு போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனா்.

59 வினாடிகள் முன்பு
குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட (இடமிருந்து) ராஜகோபால், சபரி வேலன், ஆகாஷ், சுபாஷ்.
பகிர்:

சிவகங்கையில் கடந்த மாதம் நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில் கைதானவா்களில் மேலும் நான்கு போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனா்.

சிவகங்கை பையூா் கொடிக்காடு கண்மாய் அருகே கடந்த 16.9.2026 அன்று நடைபெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடா்பாக, சிவகங்கை நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் இதுவரை 15 போ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும், ஒரு சிறுவன் பிடிக்கப்பட்டு சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஆகாஷ், சுபாஷ், ராஜகோபால், சபரி வேலன் ஆகிய நால்வரின் குற்றச் செயல்களைக் கவனத்தில் கொண்டு, இவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா பரிந்துரைத்தாா்.

இதையடுத்து, இவா்கள் நால்வரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இதன் மூலம், இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 9 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments