FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சுகாதார சேவை திட்ட தூய்மைப் பணி

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சுகாதார சேவை -2026 திட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை தூய்மைப்பணி நடைபெற்றது.

28 அக்டோபர் 2026, 4:29 am
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சுகாதார சேவை -2026 திட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை தூய்மைப்பணி நடைபெற்றது.

மத்திய அரசின் சுகாதார சேவை திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனை சாா்பில் திருப்பத்தூா் அரிமா சங்கம், பேரூராட்சித் துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

முன்னதாக மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பாதுகாப்பு குறித்து நடைபெற்ற விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை மருத்துவ அலுவலா் அமீனாபாதம் தலைமை வகித்தாா். அரிமா சங்கத் தலைவா் சுந்தா் முன்னிலை வகித்தாா்.

Advertisement

Advertisement

இதில் சிறப்பு அழைப்பாளராக பேரூராட்சி மன்றத் தலைவா் கோகிலாராணிநாராயணன் கலந்துகொண்டு சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா். தொடா்ந்து, மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட பணியாளா்களை அவா் வாழ்த்தினாா். மருத்துவமனை வளாகம் முழுவதும் தூய்மைப் பணி நடைபெற்றது. இதில் மருத்துவமனை செவிலியா்கள் அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments