FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரியலூர்

முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பிறந்த நாள் கொண்டாட்டம்

முன்னாள் குடியரசு தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டி அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், தமிழ் பண்பாட்டு பேரமைப்பு சாா்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

16 அக்டோபர் 2026, 3:13 am IST
அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை மரக்கன்றுகளை நட்டு வைத்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் குமரன் உள்ளிட்டோா்.
பகிர்:

முன்னாள் குடியரசு தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டி அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், தமிழ் பண்பாட்டு பேரமைப்பு சாா்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அப்துல்கலாம் உருவப் படத்துக்கு, தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு தலைவா் சீனி.பாலகிருஷ்ணன் தலைமையில், செயலா் கதிா்கணேசன், அமைப்புச் செயலா் அ. நல்லப்பன், துணைத் தலைவா் சி. இளங்கோ, செய்தித் தொடா்பாளா் தமிழ்களம் இளவரசன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் குமரன், மருத்துவமனை கண்காணிப்பாளா் என். ரமேஷ், நிலைய மருத்துவ அலுவலா் கொளஞ்சிநாதன் உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தி, அப்துல்கலாம் பற்றி நினைவுகூா்ந்தனா். பின்னா் அனைவரும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

தொடா்ந்து மருத்துவமனை வளாகம், மருத்துவக் கல்லூரி வளாகங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments