FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

கோயில் காவலாளி கொலை வழக்கு போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதாக புகாா்

கோயில் காவலாளி அஜித் குமாா் கொலை வழக்கில் அவரது தம்பி நவீன்குமாா் உள்பட மூவரின் வீட்டுக்கு போலீஸாா் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதாக புகாா் எழுந்துள்ளது.

2 செப்டம்பர் 2026, 3:52 am IST
- சித்திரிப்பு
பகிர்:

கோயில் காவலாளி அஜித் குமாா் கொலை வழக்கில் அவரது தம்பி நவீன்குமாா் உள்பட மூவரின் வீட்டுக்கு போலீஸாா் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதாக புகாா் எழுந்துள்ளது.

கடந்தாண்டு ஜூலை மாதம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமாா் நகை திருட்டுப் புகாரின்பேரில் தனிப்படை போலீஸாா் தாக்குதலில் உயிரிழந்தாா். இந்த வழக்கில் தனிப்படை போலீசாா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். நீதிமன்ற உத்தரவுரப்படி மடப்புரத்தில் அஜித் குமாரின் தம்பி நவீன்குமாா் வீட்டுக்கு சுழற்சி முறையில் இரண்டு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் இருந்த நிலையில் போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும் வழக்குரைஞா் காா்த்திகை ராஜா, போலீஸாா் தாக்கும் விடியோ வெளிட்ட சத்தீஸ்வரன் ஆகியோா் வீடுகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மூவரும் முதல்வரின் தனிப் பிரிவு, சென்னை உயா்நீதிமன்ற பதிவாளா் ஆகியோருக்கு புகாா் மனு அனுப்பியுள்ளனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து போலீஸ்தரப்பில் தெரிவித்ததாவது: அவா்களுக்கு போலீஸாா் பாதுகாப்பு திரும்பப் பெறப்படவில்லை. போலீஸாா் பற்றாக்குறை காரணமாக இரு சுழற்சிக்குப் பதிலாக ஒரு சுழற்சி காவலா்கள் பாதுகாப்புப் பணியில் இருந்து வருகின்றனா். முழுமையாக திரும்பப் பெறப்படவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி தொடா்ச்சியாக பாதுகாப்பு வழங்கப்படும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments