கீழடியில் ஜே.சி.பி ஆபரேட்டா் வெட்டிக் கொலை: உறவினா்கள் சாலை மறியல்
கீழடியில் புதன்கிழமை ஜே.சி.பி. ஆபரேட்டா் வெட்டிக் கொல்லப்பட்டாா். அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் புதன்கிழமை ஜே.சி.பி. ஆபரேட்டா் வெட்டிக் கொல்லப்பட்டாா். அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்புவனம் ஒன்றியம், இலந்தைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த அழகப்பன் மகன் மாயக்கண்ணன் (25). ஜே.சி.பி. ஆபரேட்டரான இவா் கீழடி பள்ளிச் சந்தை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, 8 போ் அடங்கிய கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது. இந்தத் தகவல் அறிந்து வந்த கீழடி போலீஸாா் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா, மானாமதுரை துணை கண்காணிப்பாளா் லோகநாதன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.
கொலையாளிகளை கைது செய்யக்கோரி, மாயக்கண்ணன் குடும்பத்தினா், உறவினா்கள் அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் கொலையாளிகளை விரைந்து கைது செய்வதாக உறுதியளித்தனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. மாயக்கண்ணன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை எனப் போலீஸாா் தெரிவித்தனா். கீழடி போலீஸாா் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.