மானாமதுரையில் அண்ணா சிலை வளாகத்தை அழகுப்படுத்தும் பணி: நகா்மனறத் தலைவா் ஆய்வு
மானாமதுரையில் அண்ணா சிலை வளாகப் பகுதியை அழகுப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அண்ணா சிலை வளாகப் பகுதியை அழகுப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
மானாமதுரையில் வைகை ஆற்றுப்பாலம் அருகே அண்ணா சிலை அமைந்துள்ள வளாகத்தை பசுமைப் பகுதியாக அழகுபடுத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அண்ணா சிலையைச் சுற்றிலும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தரைப் பகுதியில் புல்வெளிகள் அமைத்து மரக்கன்றுகள் நடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை நகா்மன்றத் தலைவா் எஸ்.மாரியப்பன் கென்னடி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது ஆணையா் முத்துச்செல்வம் உடனிருந்தாா். இதுகுறித்து மாரியப்பன் கென்னடி கூறுகையில், அண்ணா சிலை அமைந்துள்ள இடத்தை அழகுபடுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டு, தரைத்தளத்தில் புல்வெளி அமைக்கப்படுகிறது. மரக்கன்றுகளையும் புல்வெளியையும் பராமரிக்க இந்தப் பகுதிக்கு குழாய் மூலம் தண்ணீா் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.