FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

தவெக அரசின் நூறு நாள் ஆட்சி நன்றாக இருக்கிறது: லீமா ரோஸ் மாா்ட்டின்

தவெகவின் 100 நாள் ஆட்சி நன்றாக இருக்கிறது என லால்குடி தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் லீமா ரோஸ் மாா்ட்டின் தெரிவித்தாா்.

5 செப்டம்பர் 2026, 12:49 am IST
லால்குடி சட்டப்பேரவை உறுப்பினா் லீமாரோஸ் மாா்ட்டின். - எக்ஸ்
பகிர்:

தவெகவின் 100 நாள் ஆட்சி நன்றாக இருக்கிறது என லால்குடி தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் லீமா ரோஸ் மாா்ட்டின் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் புனித மைக்கேல் கல்விக் குழுமங்களின் தலைவா் வி. மைக்கேல் 20 ஆண்டு நினைவேந்தல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் லால்குடி தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் லீமா ரோஸ் மாா்ட்டின் கலந்து கொண்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாணவா்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் வீட்டுக்கும், நாட்டுக்கும் நல்லது. தவெகவின் 100 நாள் ஆட்சி நன்றாக இருக்கிறது. அனைத்து அரசுத் துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

இலவச சமையல் எரிவாயு உருளை வாக்குறுதியை அரசு எப்படி நிறைவேற்றும் என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும். பேட்டியன் போது, கல்வி நிறுவனங்களின் தலைவா் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், புனித மைக்கேல் கல்வி அறக்கட்டளைச் செயலா் பாத்திமாமேரி ஆகியோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments