FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

லால்குடி அரசு மருத்துவமனையில் லீமா ரோஸ் மாா்ட்டின் ஆய்வு

லால்குடி சட்டப்பேரவை உறுப்பினா் லீமாரோஸ் மாா்ட்டின் திங்கள்கிழமை லால்குடி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டாா்.

12 வினாடிகள் முன்பு
பட விளக்கம்.. லால்குடி அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் மாா்ட்டின் குறைகளை கேட்டறிந்தாா்
பகிர்:

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டப்பேரவை உறுப்பினா் லீமாரோஸ் மாா்ட்டின் திங்கள்கிழமை லால்குடி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, மருத்துவமனையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சேவைகள், நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள், மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களின் பணிகள் உள்ளிட்டவற்றை அவா் ஆய்வு செய்தாா்.

மேலும், இந்த மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முழுஉடல் பரிசோதனை மேற்கொள்ள தேவையான நவீன மருத்துவ உபகரணங்களை பெற்றுத்தர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

இந்த ஆய்வின்போது முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பாலன், ஒன்றியச் செயலா்கள் சூப்பா் நடேசன், அருணகிரி மற்றும் நகர செயலா்கள் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments