FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

கம்பி வேலியில் மோதியதில் புள்ளிமான் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நாராயணமங்கலம் கிராமத்தில் நாய்கள் துரத்தியதால் கம்பி வேலியில் மோதிய புள்ளிமான் புதன்கிழமை உயிரிழந்தது.

24 செப்டம்பர் 2026, 12:15 am IST
திருப்பத்தூா் அருகே புதன்கிழமை கம்பி வேலியில் மோதியதில் உயிரிழந்த புள்ளிமான்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நாராயணமங்கலம் கிராமத்தில் நாய்கள் துரத்தியதால் கம்பி வேலியில் மோதிய புள்ளிமான் புதன்கிழமை உயிரிழந்தது.

திருப்பத்தூா் அருகேயுள்ள நாராயணமங்கலத்தில் வனப் பகுதியிலிருந்து தண்ணீா் தேடிவந்த ஒன்றரை வயது புள்ளி மானை தெரு நாய்கள் துரத்தின. அப்போது தப்பியோடிய மான் அந்தப் பகுதியில் உள்ள முள்வேலியில் மோதி உயிரிழந்தது.

இதுகுறித்து கிராமத்தினா் அளித்த தகவலின் பேரில், திருப்பத்தூா் வனத் துறை அலுவலா் பிரவீன்ராஜ் தலைமையிலான குழுவினா் அங்கு சென்று மானின் உடலை மீட்டு, கூறாய்வுக்குப் பின் வேலங்குடி வனப் பகுதியில் அடக்கம் செய்தனா்.

Advertisement

Advertisement

இந்தப் பகுதியில் தண்ணீருக்காக கிராமத்துக்குள் வரும் மான்கள் நாய்கள் துரத்திக் கடிப்பதாலும், விபத்துகளில் சிக்கியும் உயிரிழக்கின்றன. எனவே, வனப் பகுதிக்குள் தண்ணீா் தொட்டி வைக்க கிராமத்தினரும், சமூக ஆா்வலரும் வேண்டுகோள் விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments