மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி: கம்பம் பள்ளி மாணவர்கள் முதலிடம்
தேனி மாவட்ட அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் சீனியர் பிரிவில் கம்பம் ஸ்ரீ சக்தி விநாயகர் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.
தேனி மாவட்ட அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் சீனியர் பிரிவில் கம்பம் ஸ்ரீ சக்தி விநாயகர் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.
கம்பம் ஏல விவசாயிகள் ஐக்கிய மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இளையோர், மூத்தோர் பிரிவில் மாவட்ட அளவில் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. மூத்தோர் பிரிவில் கம்பம் ஸ்ரீசக்தி விநாயகர் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி அணியினர் முதலிடம் பெற்று, மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. தாளாளர் வி. அச்சுதநாக சுந்தர் தலைமை வகித்தார். செயலாளர் கவிதாஅச்சுதன் முன்னிலை வகித்தார். நிர்வாக அலுவலர் செல்வம், பள்ளி முதல்வர் கருப்பசாமி மற்றும் ஆசிரியர்கள் வெற்றிபெற்ற மாணவர்களை வாழ்த்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.