FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

அதி வேகத்தில் பைக் ஓட்டியவா் கைது

3 நவம்பர் 2026, 1:17 am
கைது - கோப்புப்படம்
பகிர்:

போடி அருகே அதிவேகத்தில் இரு சக்கர வாகனம் ஓட்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

போடி மீனா விலக்கு புறவழிச்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் கண்காணித்து வந்தனா். அப்போது போடி புதூரைச் சோ்ந்த ஹரிஹரன் (18) அதிக வேகத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் ஹரிஹரனைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments