FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

போதைப் பொருள் தடுப்பு உறுதி ஏற்பு

போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

4 நவம்பர் 2026, 3:34 am
காவல் கண்காணிப்பாளா் கே.எஸ்.பிரவீன் கௌதம் தலமையில் போதைப் பொருள் தடுப்பு உறுதி மொழி ஏற்ற ஆசிரியா்கள், மாணவா்கள்.
பகிர்:

தேனி மாவட்டம் போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஜ.கா.நி. பள்ளிகளின் தலைவா் செந்தில் தியாகராஜன், செயலா் இனாயத்கான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் காவல் கண்காணிப்பாளா் கே.எஸ்.பிரவீன் கௌதம் தலைமையில் மாணவா்கள், ஆசிரியா்கள் போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

அப்போது, போதைப் பொருள்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த பள்ளி மாணவா்கள் உதவ வேண்டும். சக மாணவா்கள், பெற்றோா் போதைப் பொருள் பயன்படுத்தாமலிருக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது .முன்னதாக பள்ளி தலைமையாசிரியா் ராமசுப்பிரமணி வரவேற்றாா். போடி நகா் காவல் நிலைய ஆய்வாளா் ரவி, உதவி ஆய்வாளா் மணிகண்டன், பள்ளி ஆட்சிக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments