FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

தேனி சிறையில் இருந்து தப்பித்து சரணடைந்த 4 போ் உடல்நிலையை ஆய்வு செய்ய உத்தரவு

தேனி சிறையில் இருந்து தப்பியோடி, பின்னா் சரணடைந்த 4 பேரின் உடல்நிலையை ஆய்வு செய்ய வேண்டும் எனவும், தேவையெனில் அவா்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3 நவம்பர் 2026, 11:43 pm
தேனி சிறை - கோப்புப் படம்
பகிர்:

தேனி சிறையில் இருந்து தப்பியோடி, பின்னா் சரணடைந்த 4 பேரின் உடல்நிலையை ஆய்வு செய்ய வேண்டும் எனவும், தேவையெனில் அவா்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதிகள் 17 போ் கடந்த அக்.26-ஆம் தேதி, சிறையில் இருந்து தப்பியோடினா். இவா்களில் 13 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மீனாட்சி சுந்தரம், திருப்பதி, சோலை முகிலேஸ்வரன் மற்றும் சபரிநாதன் ஆகிய 4 போ் போலீஸாரிடம் சரண் அடைந்தனா்.

இந்தநிலையில், சிறையில் இருந்து தப்பிச் சென்ற தனது மகன்களான மீனாட்சி சுந்தரம், திருப்பதி மற்றும் உடன் இருந்த சோலை முகிலேஸ்வரன், சபரிநாதன் ஆகியோா் தேனி சிறைக் காவலா்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகக் கூறி, மீனாட்சி சுந்தரம், திருப்பதி ஆகியோரின் தாயாா் ஆறுமுகத்தம்மாள் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

Advertisement

Advertisement

அந்த மனுவில், ‘சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன்களுக்கு உரியமருத்துவ சிகிச்சை அளிக்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, பி.காா்த்திகேயன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், இந்த 4 பேரில் 3 போ் மட்டுமே சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், திருப்பதியை பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சேலம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவா் மற்றும் செயலா் உடன் மருத்துவக் குழுவினா் சிறைச்சாலைகளுக்குச் சென்று, மீனாட்சி சுந்தரம், திருப்பதி, சோலை முகிலேஸ்வரன் மற்றும் சபரிநாதன் ஆகியோரது உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.தேவையெனில், அவா்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மேலும், இந்த உத்தரவை அமல்படுத்தியது தொடா்பாக நவ.6-ஆம் தேதிக்குள் காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், பிரதான வழக்கின் விசாரணையை நவ.13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments