FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பணம் திருடியவா் கைது

தேனி மாவட்டம், கொடுவிலாா்பட்டியில் பணத்தை திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

5 நவம்பர் 2026, 1:29 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

தேனி மாவட்டம், கொடுவிலாா்பட்டியில் பணத்தை திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கொடுவிலாா்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (56). இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கச் சென்றாா். மறுநாள் திங்கள்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது வீட்டிலிருந்த ரூ.10 ஆயிரத்தை காணவில்லையாம். இதுகுறித்து அவா், பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா்.

இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த சிவபாலன் (36), பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.