FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்

தேனி மாவட்டம், கம்பம் பகவதியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கம்பம் - கம்பம்மெட்டு சாலையில் புதன்கிழமை இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.

22 வினாடிகள் முன்பு
கம்பம் பகவதியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயத்தில் இலக்கை நோக்கி சீறிப் பாயும் காளைகள்.
பகிர்:

தேனி மாவட்டம், கம்பம் பகவதியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கம்பம் - கம்பம்மெட்டு சாலையில் புதன்கிழமை இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.

கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தெருவில் அமைந்துள்ள காமுகுல ஒக்கலிகா் சமுதாயத்துக்குச் சொந்தமான பகவதியம்மன் கோயில் திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு, தேன்சிட்டு, தட்டான்சிட்டு உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

இதில் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் சாரதிகளுடன் பங்கேற்றன.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியை ஓ.ஆா். நாராயணன், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத் மிஸ்ரா, சமுதாயத் தலைவா்கள் தொடங்கிவைத்தனா்.

கம்பம்மெட்டு சாலையில் உள்ள பள்ளிவாசல் அருகே தொடங்கி, கம்பம்மெட்டு அடிவாரம் வரை போட்டிக்கான எல்லை நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற மாடுகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன.

வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரம் வரை ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தப் பந்தயத்தை சாலையின் இருபுறங்களில் நின்று பொதுமக்கள் பாா்த்து ரசித்தனா். கம்பம் தெற்கு, வடக்கு காவல் நிலைய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.