கம்பத்தில் மாட்டு வண்டிப் பந்தயம்
தேனி மாவட்டம், கம்பத்தில் ஸ்ரீமந்தையம்மன் கோயில் புரட்டாசித் திருவிழாவையொட்டி, இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம், கம்பத்தில் ஸ்ரீமந்தையம்மன் கோயில் புரட்டாசித் திருவிழாவையொட்டி, இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.
கம்பம்-கம்பம்மெட்டு சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்துக்கு சமுதாயத் தலைவா் ஓ.ஆா். நாராயணன் தலைமை வகித்தாா். தங்கப்பாண்டியன், பிரதாப், சிங்கத்துரை, நாகராஜ், செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளா்களாக மதிமுக மாவட்டச் செயலா் வி.எஸ்.கே. ராமகிருஷ்ணன்,
Advertisement
Advertisement
தவெக மாவட்ட துணைச் செயலா் கூடல் செல்வேந்திரன், திமுக தெற்கு நகரச் செயலா் பால்பாண்டி ராஜா ஆகியோா் கலந்து கொண்டனா். 8 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற இந்தப் போட்டியில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
தட்டான் சிட்டு, தேன் சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் மாடு, நடுமாடு, பெருமாடு என ஆறு பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்தப் போட்டியை ஆா்.ஆா். பன்னாட்டுப் பள்ளித் தலைவா் ஆா். ராஜாங்கம், தேனி மாவட்ட முன்னாள் அறங்காவலா் குழு உறுப்பினா் கே.ஆா். ஜெயப்பாண்டியன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களுக்கு ரூ. 30,000 முதல் ரூ. 10,000 வரை ரொக்கப் பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்பட்டன. போட்டியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனா். இதற்கான ஏற்பாடுகளை பிரமலைக் கள்ளா் சமுதாய அமைப்பினா் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.