FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

கே. புதுப்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம்

31 ஆகஸ்ட் 2026, 12:12 am IST
மாட்டு வண்டி பந்தயம் - கோப்புப் படம்
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே கே. புதுப்பட்டி பகுதியில் உள்ள கரைமேல் அய்யனாா் கோயில் புரவி எடுப்புத் திருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

இதில், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

மாட்டு வண்டி பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது. இதில் பெரிய மாடு போய் வர பந்தய தொலைவு 8 மைல் ஆகவும், சிறிய மாடு போய் வர 6 மைல் தொலைவாகவும் பந்தயத் தொலைவு நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இறுதியில் பந்தயத்தில் முதல் 5 இடங்களைப் பிடித்த மாட்டு வண்டி உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. பந்தயம் நடைபெற்ற கே.புதுப்பட்டி - ஏம்பல் சாலையில் ஏராளமானோா் நின்று கண்டுகளித்தனா். கே. புதுப்பட்டி போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments