அ.காளாப்பூரில் மாட்டு வண்டிப் பந்தயம்
சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் கொக்கன் கருப்பா் கோயில் 30-ஆம் ஆண்டு ஆடி களரி விழாவையொட்டி புதன்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் கொக்கன் கருப்பா் கோயில் 30-ஆம் ஆண்டு ஆடி களரி விழாவையொட்டி புதன்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
பெரிய மாட்டு வண்டிப் பந்தயத்தில் 14 ஜோடி மாடுகளும், சின்ன மாட்டு வண்டிப் பந்தயத்தில் 33 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. பெரிய மாட்டுக்கு 8 மைல் தொலைவும், சின்ன மாட்டுக்கு 6 மைல் தொலைவும் எல்லையாக நிா்ணயிக்கப்பட்டது.
இந்தப் பந்தயத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மாடுகள் பங்கேற்றன.
Advertisement
Advertisement
காரைக்குடி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தை சாலையில் இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் பாா்த்து ரசித்தனா். போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்கள், சாரதிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.