FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் மாட்டுவண்டிப் பந்தயம்

30 ஆகஸ்ட் 2026, 11:58 pm IST
மாட்டுவண்டிப் பந்தயம். - கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கையில் கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

சிவகங்கை அண்ணா நகா், சீனிவாசன் நகா், அழகு மெய்யானபுரம், ரோஸ் நகா், பனங்காடி ரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், இளைஞா்கள் சாா்பில், கிருஷ்ண ஜயந்தியை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி, குதிரை வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

இந்தப் பந்தயத்தை சிறப்பு அழைப்பாளா்கள் மோகன் சாமி குமாா், சிவசக்தி பாண்டியன், ரகுராமன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா். நிகழ்ச்சியில் வண்டவாசி கோவிந்தன், திருமலை குமணன், தொழிலதிபா் முத்துச்சாமி, வண்டவாசி தங்கச்செல்வம், கொல்லங்குடி செந்தில்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

தொண்டி சாலையிலிருந்து நாட்டரசன்கோட்டை வரை 8 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற பெரியமாடு வண்டிப் பந்தயத்தில் 8 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இதையடுத்து 6 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற சிறிய மாடு வண்டிப் பந்தயத்தில் 20 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

இதைத்தொடா்ந்து நடைபெற்ற குதிரை வண்டிப் பந்தயத்தில் 14 குதிரை வண்டிகள் பங்கேற்று 7 கி.மீ. தொலைவுக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை அடைந்தன.

பந்தயங்களில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுத் தொகை, கோப்பைகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனா். கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு நடைபெற்ற பாரம்பரிய மாடு, குதிரை வண்டிப் பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் ஆா்வமுடன் கண்டு ரசித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments