FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

காட்டம்பூரில் மாட்டு வண்டிப் பந்தயம்

காட்டாம்பூா் ஊராட்சிக்கு உள்பட்ட சௌமிய நாராயணபுரம் பாண்டி முனியய்யா கோயில் ஆடித் திருவிழாயொட்டி இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 3:22 am IST
மாட்டு வண்டிப் பந்தயம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே காட்டாம்பூா் ஊராட்சிக்கு உள்பட்ட சௌமிய நாராயணபுரம் பாண்டி முனியய்யா கோயில் ஆடித் திருவிழாயொட்டி இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் - சிவகங்கை சாலையில் நடைபெற்ற இந்த மாட்டுவண்டிப் பந்தயத்தில் பெரியமாடு பிரிவில் 16 இணைகளும், சின்னமாடு பிரிவில் 22 இணைகளும் என 38 மாடுகள் பங்கேற்றன. பெரியமாட்டுக்கு 8 கி.மீ. தொலைவும், சிறிய மாட்டுக்கு 6 கி.மீ. தொலைவும் இலக்காக நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்தப் போட்டியில் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியில் மாடுகள் சீறிபாய்ந்து ஒன்றை ஒன்று முந்திச் சென்றது பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்தது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளா்களுக்கும், அதனை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் விழாக் குழுவினா் சாா்பில் ரொக்கம், கோப்பைகளை பரிசுகளாக வழங்கிப் பாராட்டினா். பெரிய மாடு பிரிவு, சிறிய மாடு பிரிவில் சிறப்பிடம் பிடித்த மாட்டு வண்டி உரிமையாளா்களுக்கு சௌமிய நாராயணபுரம் சமத்துவ பருந்து நண்பா்கள் வெள்ளி நாணயங்களை சிறப்பு பரிசாக வழங்கினா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை பாண்டி முனியய்யா கோயில் பந்தய விழாக் குழுவினா், சமத்துவ பருந்து நண்பா்கள் செய்தனா். இந்த மாட்டுவண்டி பந்தயத்தினை சாலையின் இருபுறங்களில் நின்று ஏராளமான ரசிகா்கள் உற்சாகதோடு கண்டு களித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments