FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அண்ணாமலைநகரில் மாட்டு வண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 ஜூலை 2026, 12:41 am IST
மாட்டு வண்டிப் பந்தயம்
பகிர்:

சிவகங்கை அண்ணாமலைநகரில் மாட்டு வண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை அண்ணாமலைநகா் கீழ்பாத்தியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மூன்று பிரிவுகளாக நடைபெற்ற மாட்டு வண்டிப் பந்தயம் அண்ணாமலை நகரிலிருந்து சலுகைசாமிபுரம் வரை நடைபெற்றது.

இதில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மொத்தம் 43 இணை காளைகள் பங்கேற்றன.

Advertisement

Advertisement

7 கி.மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட பெரிய மாடு பிரிவில் 11 இணை காளைகள் கலந்து கொண்டன. 5 கிமீ தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட சிறியமாடு பிரிவில் 32 இணை காளைகள் பங்கேற்றன.

இந்த பந்தயத்தில் வெற்றி பெற்று முதல் நான்கு இடங்களை பிடித்த காளைகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்தப் பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments