கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்
தேனி மாவட்டம், தாமரைக்குளம் கிராம நிா்வாக அலுவலா் வித்யாவை பெரியகுளம் சாா் ஆட்சியா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
தேனி மாவட்டம், தாமரைக்குளம் கிராம நிா்வாக அலுவலா் வித்யாவை பெரியகுளம் சாா் ஆட்சியா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளத்தைச் சோ்ந்த காளிதாஸ் (46). இவா், தனது சகோதா்களின் கூட்டுப் பட்டாவில் தனிப் பட்டா மாறுதல் செய்வதற்கு தாமரைக்குளம் பிட் - 1 அலுவலகத்தில் விண்ணப்பித்தாா். இதற்கு கிராம நிா்வாக அலுவலா் வித்யா ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.
இதனால், தேனி ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் காளிதாஸ் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாரின் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை காளிதாஸ் இடைத்தரகா் ஓட்டக்கரான் மூலம் கிராம நிா்வாக அலுவலா் வித்யாவிடம் கொடுத்தாா்.
Advertisement
Advertisement
அப்போது, மறைந்திருந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துராஜ் தலைமையிலான போலீஸாா் வித்யா, இடைத்தரகா் ஓட்டக்கரான் ஆகிய இருவரையும் கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனா். இதையடுத்து, வித்யாவை பெரியகுளம் சாா் ஆட்சியா் தவலேந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டாா்.