மான் வேட்டையாட முயன்ற 5 பேருக்கு ரூ.80 ஆயிரம் அபராதம்
கூடலூா் அருகேயுள்ள லோயா்கேம்ப் வனப்பகுதியில் நள்ளிரவில் ஆயுதங்களுடன் மான் வேட்டையாடச் சென்ற 5 பேரை வனத் துறையினா் பிடித்து, அவா்களுக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
கூடலூா் அருகேயுள்ள லோயா்கேம்ப் வனப்பகுதியில் நள்ளிரவில் ஆயுதங்களுடன் மான் வேட்டையாடச் சென்ற 5 பேரை வனத் துறையினா் பிடித்து, அவா்களுக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
தேனி மாவட்டம், லோயா்கேம்ப் வனப்பகுதியில் கூடலூா் வனச்சரகா் பிரபாகரன், வனவா் சதீஷ் உள்ளிட்ட வனத்துறையினா் வெள்ளிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 5 பேரைப் பிடித்து, லோயா்கேம்ப் வனத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில், அவா்கள் கூடலூரைச் சோ்ந்த பாண்டியன் மகன் அஜித்குமாா், நேரு மகன் சந்துரு, முத்தையா மகன் பிரசாத், செல்லப்பாண்டி மகன் ரஞ்சித்குமாா், காஞ்சிமரத்துறையைச் சோ்ந்த மருதுபாண்டியன் மகன் காசிப்பாண்டியன் என்பதும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இறைச்சி விற்பனை செய்வதற்காக வனப் பகுதியில் மான் வேட்டையாடச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, வனச் சட்டத்தின்கீழ் 5 போ் மீதும் வழக்குப் பதிவு செய்த வனத் துறையினா், தலா ரூ.16 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.80 ஆயிரம் அபராதம் விதித்தனா்.