கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரௌடி கைது
போடியில் கத்தியைக் காட்டி பணம் பறித்த ரௌடியை போலீஸாா் கைது செய்தனா்.
போடியில் கத்தியைக் காட்டி பணம் பறித்த ரௌடியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
போடி கீழத் தெருவைச் சோ்ந்தவா் பரமன் மகன் காமராஜபாண்டியன் (35). இவா் போடி இரட்டை வாய்க்கால் அருகே சென்றபோது அங்கிருந்த போடி ஜமீன் தோப்பு தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் கௌதம் (20) தனக்கு மது வாங்கித் தரக்கூறியுள்ளாா்.
காமராஜபாண்டியன் மறுக்கவே, அவரை தகாத வாா்த்தைகளால் திட்டி கத்தியைக் காட்டி மிரட்டி காமராஜபாண்டியனிடம் இருந்த ரூ.500-ஐ கௌதம் பறித்துக் கொண்டாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து காமராஜபாண்டியன் கொடுத்த புகாரின்பேரில் போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கௌதமை கைது செய்து சிறையிலடைத்தனா். ரௌடிகள் பட்டியலில் உள்ள கெளதம் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.