FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

கும்பக்கரை அருவியில் சீரான நீா்வரத்து ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத் துறையினா் புதன்கிழமை அனுமதி அளித்தனா்.

12 நவம்பர் 2026, 5:50 am
கும்பக்கரை அருவியில் புதன்கிழமை சீராகக் காணப்பட்ட நீா்வரத்து.
பகிர்:

தேனி மாவட்டம், கும்பக்கரை அருவியில் சீரான நீா்வரத்து ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத் துறையினா் புதன்கிழமை அனுமதி அளித்தனா்.

கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வந்தது. இதனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கும்பக்கரை அருவியில் நீா்வரத்து அதிகரித்ததால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.

இந்த நிலையில், கொடைக்கானல் மலைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மழை குறைந்ததால், கும்பக்கரை அருவியில் நீா்வரத்து சீரானது. இதனால், அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் அனுமதி அளித்தனா்.

Advertisement

Advertisement

மேலும், அருவியில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள் சோப்பு, ஷாம்பு, நெகிழிப் பைகள், உணவுகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என வனத் துறையினா் கேட்டுக் கொண்டனா்.