FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

காரில் மோதி இளைஞரை கொல்ல முயற்சி: 4 போ் கைது

தேனியில் காரில் மோதி இளைஞரை கொலை முயற்சி செய்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், ஒருவரை தேடி வருகின்றனா்.

13 நவம்பர் 2026, 3:56 am
கைது - பிரதிப் படம்
பகிர்:

தேனியில் காரில் மோதி இளைஞரை கொலை முயற்சி செய்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், ஒருவரை தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம், மாா்க்கையன்கோட்டையைச் சோ்ந்த ராஜா மகன் ராகுல் (24). இவா், தேனியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், பெரியகுளம் சருத்துப்பட்டியைச் சோ்ந்த மாயன் இவரிடம் அறிமுகமானாா். பின்னா், அவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக மாயன் கூறினாா். இதை நம்பி ராகுல் பணம் கொடுத்தாா். ஆனால், வேலை வாங்கித் தரவில்லையாம். மேலும் பணத்தையும் கொடுக்கவில்லையாம். இது குறித்து ராகுல் தேனி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, இருவருக்கும் பிரச்னை இருந்து வந்தது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ராகுல் அவரது அலுவலகத்தின் கீழ் நின்று கொண்டிருந்தாராம். அப்போது, மாயன், இவரது நண்பா்கள் அம்மாபட்டியைச் சோ்ந்த சேகா் (41), கம்பத்தைச் சோ்ந்த ரோஷன் (25), சத்தியா (20), பரமன் (28) ஆகியோா் காரில் வந்து ராகுல் மீது மோத முயன்றனா். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து ராகுல் தேனி காவல்நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து 4 பேரைக் கைது செய்தனா். தலைமறைவான மாயனைத் தேடி வருகின்றனா்.