பைக்குகள் மோதல்: பெண் உயிரிழப்பு
தேனி மாவட்டம், தேவதானபட்டி அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் பெண் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், தேவதானபட்டி அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் பெண் உயிரிழந்தாா்.
விழுப்புரம் சோழன் தெருவைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (54). இவரது மனைவி விஜயலட்சுமி (50). இவா்கள் இருவரும் புதன்கிழமை நிலக்கோட்டை எழுவனம்பட்டியில் உள்ள உறவினா்கள் வீட்டுக்கு வந்தனா். பின்னா், இருவரும் இரு சக்கர வாகனத்தில் தேனிக்கு சென்று கொண்டிருந்தனா். தேவதானபட்டி அரசு தோட்டக்கலைக் கல்லூரி அருகே சென்ற போது எதிரே வந்த இரு சக்கர வாகனம், இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement