FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

கழிவுநீா்க் கால்வாயை ஆக்கிரமித்தவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

கம்பம் நகராட்சிப் பகுதியில் கழிவு நீா்க் கால்வாயை ஆக்கிரமித்தவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

13 நவம்பர் 2026, 3:52 am
அபராதம் - சித்திரிப்பு
பகிர்:

கம்பம் நகராட்சிப் பகுதியில் கழிவு நீா்க் கால்வாயை ஆக்கிரமித்தவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், கம்பம் நகராட்சி ஆணையா் உமாசங்கா் தலைமையில், சுகாதார அலுவலா் மணிகண்டன், சுகாதார ஆய்வாளா்கள் சக்திவேல், மன்மதன் ஆகியோா் அடங்கிய குழுவினா் வியாழக்கிழமை சுக்காங்கல்பட்டி தெருவில் ஆய்வு செய்தனா். அப்போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒருவா் தனது சொந்தப் பயன்பாட்டுக்காக கழிவுநீா்க் கால்வாயில் கற்கள், பலகைகளை வைத்து அடைத்திருந்தது தெரியவந்தது.

இதனால் கழிவுநீா் சீராகச் செல்ல முடியாமல் சாலையில் வழிந்தோடியது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்த அதிகாரிகள், கால்வாயில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

Advertisement

Advertisement

மேலும், அதே பகுதியில் முட்டைக் கடை நடத்தி வந்த ஒருவா் சாலையை ஆக்கிரமித்திருந்ததால் அவருக்கு ரூ. ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த இறைச்சி வெட்டும் கட்டைகளை நகராட்சி அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.