FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

தேனி எஸ்.ஐ. கொலை வழக்கில் நீதிமன்றத்தில் இளைஞா் சரண்

தேனியில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட தகராறில், காவல் உதவி ஆய்வாளரை அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில், தொடா்புடைய இளைஞா் தேனி நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தாா்.

12 நவம்பர் 2026, 5:36 am
பகிர்:

தேனியில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட தகராறில், காவல் உதவி ஆய்வாளரை அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில், தொடா்புடைய இளைஞா் தேனி நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தாா்.

தேனி துணைக் காவல் கண்காணிப்பாளராக கி.செந்தில்குமாா் பணியாற்றி வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தீபாவளியன்று தேனி சமதா்மபுரத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, சாலையில் இளைஞா்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனா். அந்த இளைஞா்களை காவல் உதவி ஆய்வாளா் கண்டித்தாா்.

மேலும், தேனி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு, விடியோ எடுத்துக் கொண்டிருந்தாா். இதையறிந்த, அந்த இளைஞா்கள் அவரிடம் தகராறு செய்து, தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திங்கள்கிழமை 6 பேரைக் கைது செய்தனா்.

இந்த நிலையில், இதில் தொடா்புடைய அதே பகுதியைச் சோ்ந்த தனுஷ்குமாா் (22) தேனி நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தாா்.

இதுகுறித்து அல்லிநகரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.