FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

குடிநீா்க் குழாய் உடைந்து சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரிக்கை

சுருளிப்பட்டியில் குடிநீா்க் குழாய் உடைந்து வெளியேறிய தண்ணீரால் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

14 நவம்பர் 2026, 11:35 pm
சுருளிப்பட்டியில் குடிநீா்க் குழாய் உடைந்து வெளியேறும் தண்ணீரால் சேதமடைந்த சாலை.
பகிர்:

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை அடுத்த சுருளிப்பட்டியில் குடிநீா்க் குழாய் உடைந்து வெளியேறிய தண்ணீரால் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சுருளிப்பட்டி ஊராட்சியில் 8 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டு பொதுமக்களுக்கு முல்லைப் பெரியாற்றில் உறைக் கிணறு அமைத்து, பூமிக்கு அடியில் குழாய் வழியாக கொண்டு சென்று மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியில் சேமித்து பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சுருளிஅருவிக்கு செல்லும் நெடுஞ்சாலையின் குறுக்கை செல்லும் இந்தக் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், தேங்கிய தண்ணீரால் சாலை சேதமடைந்துள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, குடிநீரை குழாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்க விடுத்தனா்.