பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
தேனியில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தேனியில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி அல்லிநகரம் பொம்மையகவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (49). கூலித் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை நண்பரைப் பாா்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் தேனிக்கு சென்று கொண்டிருந்தாா். சுக்குவாடன்பட்டி தனியாா் பருப்பு தொழில்சாலை அருகே சென்ற போது, நிலை தடுமாறி கீழே விழுந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அல்லிநகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement